அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள LAWASIA மாநாட்டின் இலட்சினை வெளியிடப்பட்டது

அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள LAWASIA மாநாட்டின் இலட்சினை வெளியிடப்பட்டது

அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள LAWASIA மாநாட்டின் இலட்சினை வெளியிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

15 Dec, 2015 | 10:59 am

அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள லோ ஏஷியா 50 ஆவது ஆண்டு நிறைவு விழா – 29 ஆவது லோ ஏஷியா மாநாட்டு இலட்சினை 13 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

50 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் மாநாடு இலட்சினையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்,ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அதுகுறித்து நான் தெளிவாக இருக்க வேண்டும் அப்படி இருக்காவிடின் நாம் மற்றுமொரு பொன்னான சந்தர்ப்பத்தை இழந்து விடுவோமென இதன் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அலகரட்சம் தெரிவித்தார்.

இதேவேளை நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும், சட்டவாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் அதுமட்டுமன்றி சட்டத் துறையின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கும் லோ ஏஷியா அமைப்பு வழங்கிய ஒத்துழைப்பை நாம் ஒருபோதும் மறக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி உப்புல் ஜயசூரிய இதன் போது குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த விழாவின் போது லோ ஏஷியா அமைப்பின் தலைவர் பிரஷாந்த குமார கருத்து தெரிக்கையில்…

[quote]சட்டத் தொழில் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்ட சேவைகளின்போது பின்வாங்க முடியாது என்பதே எனது கருத்தாகும், ஜனாதிபதி கூறியுள்ளதைப் போன்று செயற்பாட்டு ரீதியாகவும் நடைமுறை ரீதியாவும் பாரிய விடயங்களை நிறை​வேற்ற வேண்டியுள்ளது[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்