வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 7:43 am

வாகன விபத்துக்களை தவிர்ப்பதற்காக 12 அமைச்சுகள் இணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரித்துள்ளன.

இந்த தேசிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் உயிராபத்து மிக்க விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

திடீர் விபத்துக்களால் உயிரிழக்கின்ற மற்றும் அங்கவீனமடையும் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறன நிலைமை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் கூறினார்.

புதிய சட்டங்கள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தேசிய வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்