முதல் முறையாக தேர்தலில் வாக்களித்த சவுதிப் பெண்கள்

முதல் முறையாக தேர்தலில் வாக்களித்த சவுதிப் பெண்கள்

முதல் முறையாக தேர்தலில் வாக்களித்த சவுதிப் பெண்கள்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 4:14 pm

மன்னர் ஆட்சி நடைபெற்று வருகின்ற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடவோ கார் ஓட்டவோ அனுமதி இல்லை.

இந்நிலையில், இன்று அங்கு இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் பெண்கள் வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என சவுதிப் பெண்கள் மேற்கொண்ட நீண்ட நெடும் போராட்டத்திற்கு இன்றைய தினம் ஓர் நல்ல பலன் கிட்டியுள்ளது.

அதன்படி, 979 பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். சுமார் 1,30,637 பெண் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதும் அடங்கும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்