மானிப்பாயில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மானிப்பாயில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மானிப்பாயில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 9:19 am

யாழ். மானிப்பாய் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இந்த பரிதாப சம்பவம் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய், நலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிறுவனே கிணற்றில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

22 அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றில் சிறுவன் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் சடலம் யாழ். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (12) நடத்தப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்