மண் சரிவு அனர்த்தம் நேர்ந்து 1 வருடமாகியும் இருளில் வாழும் மீரியபெத்த மக்கள்

மண் சரிவு அனர்த்தம் நேர்ந்து 1 வருடமாகியும் இருளில் வாழும் மீரியபெத்த மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 7:10 pm

கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியில் மண் சரிவு அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், மண் சரிவு காரணமாக தடைப்பட்ட மின் விநியோகம் இதுவரை மீள வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் வசிக்கும் இலக்கம் 14, 15 லயன்களிலுள்ள 32 வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு மீள வழங்கப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக குப்பி விளக்குகளையே நம்பியுள்ளனர்.

மழைக்காலங்களில் மின்சாரம் இன்மையால் பாரிய பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்