நூறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

நூறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

நூறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 7:29 am

நூறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று (12) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இம்முறை வரவு –செலவுத்திட்ட முன்மொழிவுகளில் அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் இந்த துறைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்வரும் 15 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அழைப்பை விடுத்திருந்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்பொருட்டு கடந்த வாரம் முழுவதும் பல்வேறு வடிவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளை ​தொழிற்சங்கங்கள் மேற்கொண்டிருந்ததாக தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கூறினார்.

இந்த அடிப்படையிலேயே பிரதமருடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

சுகாதார, தபால், ரயில;வே, வங்கி, அச்சக துறைகள் உள்ளிட்ட சுமார் நூறு தொழிற்சங்கங்கள் இன்றைய கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமருடனான கலந்துரையாடல் தோல்வியுறும் பட்சத்தில், எதிர்வரும் 15 ஆம் திகதி நிச்சயமாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

வரவு –செலவுத்திட்டத்தில் நீக்கப்பட்டுள்ள ஓய்வூதிய கொடுப்பனவு, ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கான அக்ரஹார காப்புறுதி, அரச வங்கிகளின் வருமான நீக்கம், அடிப்படை சம்பளத்துடன் 10,000 ரூபா கொடுப்பனவை சேர்க்காமை, மேன் பவர் ஊழியர்களை நிரந்தமாக சேவையில் இணைத்துக்கொள்ளாமை போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சமன் ரத்னப்பிரிய மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்