சச்சினை விட கவாஸ்கர் சிறந்த வீரர் என இம்ரான் கான் தெரிவிப்பு

சச்சினை விட கவாஸ்கர் சிறந்த வீரர் என இம்ரான் கான் தெரிவிப்பு

சச்சினை விட கவாஸ்கர் சிறந்த வீரர் என இம்ரான் கான் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 12:28 pm

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் இமரான் கான் சச்சின் டென்டுல்கர் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

சச்சினை விட சுனில் கவாஸ்கர் தான் சிறந்த வீரர் என்றும் அவர் விளையாடிய இன்னிங்ஸ் போல் டென்டுல்கர் விளையாடவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் கவாஸ்கர் மேற்கிந்தியதீவுகள் அணியின் 4 உலகதரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சச்சின் கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பும் சிறப்பு வாய்ந்தது அதை விமர்சிக்க முடியாது, இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நிறுத்துவதால் தீவிரவாதத்துக்கு பதில் கூறிவிட முடியாது எனவும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜாம்பவான் இம்ரான் கான் கூறியுள்ளார்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்