கொழும்பு – பண்டாரவளைக்கு இடையில் விசேட ரயில் சேவை

கொழும்பு – பண்டாரவளைக்கு இடையில் விசேட ரயில் சேவை

கொழும்பு – பண்டாரவளைக்கு இடையில் விசேட ரயில் சேவை

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 11:32 am

பாடசலை விடுமுறையை முன்னிட்டு கொழும்பிலிருந்து பண்டாரவளைக்கு இடையிலான விசேட ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 18, 21, 23, 26, 28, 30 மற்றும் முதலாம் திகதிகளில் இந்த ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் குறிப்பிட்ட தினங்களில் கொழும்பிலிருத்து மாலை 6.15 க்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் காலை 6.15 பண்டாரவளையில் இருந்து மீண்டும் கொழும்பிற்கான ரயில் சேவை இடம்பெறவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்