காணாமற்போனோர் ​தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் யாழ் அமர்வின் இரண்டாம் நாள் இன்று

காணாமற்போனோர் ​தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் யாழ் அமர்வின் இரண்டாம் நாள் இன்று

காணாமற்போனோர் ​தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் யாழ் அமர்வின் இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 8:10 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இரண்டாம் நாளாக இன்றும் யாழ். மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

யாழ். கச்சேரியில் இரண்டாம் நாளாகவும் இன்று ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழு முன்னிலையில் வாய்மூல சாட்சியம் அளிப்பதற்காக யாழ். பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 266 பேருக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் வாய்மூல சாட்சியமளிப்பதற்காக 235 பேருக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 165 பேர் பிரசன்னமாகியிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

யாழ். கச்சேரியில் நேற்று நடைபெற்ற முதலாவது அமர்வில் 165 பேரிடமும் வாய்மூல சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதுடன், 45 பேரிடமிருந்து புதிதாக முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி நேற்று சாட்சியமளிக்க முடியாமல்போனவர்கள், இரண்டாம் நாளான இன்று சாட்சியமளிக்க முடியும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நல்லூர், யாழ்ப்பாணம், கரவெட்டி, மருதங்கேணி, வடமாராட்சி, சண்டிலிப்பாய், சங்காணை, உடுவில், தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆணைக்குழு அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்