காணாமற்போனோர் தொடர்பில் யாழில் 185 பேர் சாட்சியம்: 53 புதிய முறைப்பாடுகள்

காணாமற்போனோர் தொடர்பில் யாழில் 185 பேர் சாட்சியம்: 53 புதிய முறைப்பாடுகள்

எழுத்தாளர் Bella Dalima

12 Dec, 2015 | 9:47 pm

யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இன்றைய தினம் 185 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

சாட்சி விசாரணைகளுக்கு இன்று 288 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் H.W. குணதாச குறிப்பிட்டார்.

இன்றைய அமர்வில் 53 புதிய முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.

யாழ். பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் இன்று சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்