கபாலியில் 2 தோற்றங்களில் நடிக்கும் ரஜினி

கபாலியில் 2 தோற்றங்களில் நடிக்கும் ரஜினி

கபாலியில் 2 தோற்றங்களில் நடிக்கும் ரஜினி

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 10:04 am

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.’ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது முதல் கட்ட படப்பிடிப்பை சென்னை சோவியத் கலாசார மையம், மீனம்பாக்கம் விமான நிலையம் போன்ற இடங்களில் நடத்தினர். மலேசியா மற்றும் பாங்காக்கிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.

தற்போது கோவாவில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ரஜினிகாந்த் மற்றும் படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. வெள்ளை தாடியுடன் கோட்-சூட் அணிந்து மிடுக்காக வருவது போன்ற படங்கள் இணைய தளங்களில் வெளிவந்தன.

இந்த தோற்றத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர் ஆனால் மலேசிய ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த இடங்களுக்குள் புகுந்து செல்போனில் படம் எடுத்து இணைய தளங்களில் பரவ விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். ரசிகர்களை படப்பிடிப்பு அரங்குக்குள் அனுமதிக்கவில்லை.

துணை நடிகர், நடிகைகள் மற்றும், தொழில்நுட்ப கலைஞர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தாடி இல்லாமல் கண்ணாடி அணிந்து இளமை தோற்றத்தில் இருப்பது போன்ற இன்னொரு படமும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதளங்களில் நேற்று வெளிவந்தது, கோவாவில் நடந்த படப்பிடிப்பில் இந்த படத்தை எடுத்துள்ளனர்.

இதன்மூலம் ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் 2 தோற்றங்களில் நடிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயது குறைந்த தோற்றத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். கிஷோர், கலையரசன், தன்ஷிகா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

பா.ரஞ்சித் இக்கும் இந்த படத்தை தாணு தயாரிக்கிறார், ஏப்ரல் 14 ஆம் திகதி தமிழ் புத்தாண்டில் ‘கபாலி’ படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்