கந்தானையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

கந்தானையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

கந்தானையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 9:42 am

கந்தானை, கபுவத்தை ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்கிஸ்ஸ நோக்கிப் பயணித்த ரயிலில் இன்று காலை 7.45 அளவில் காரொன்று மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

அனர்த்த எச்சரிக்கை சமிக்ஞை மற்றும் எச்சரிக்கை ஒலிக்கருவி என்பன இயங்கும் நிலையில், கவனயீனமாக கார் ரயில் கடவையூடாக பயணித்தமையால் விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

காரிலிருந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்