இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஹப்புத்தலை உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஹப்புத்தலை உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ஹப்புத்தலை உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2015 | 1:27 pm

20,000 ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் ஹப்புத்தலை பொலிஸ் நிலைய உதவி இன்ஸ்பெக்டர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

1954 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தீயினால் எரிந்து சேதமடைந்த முக்கச்சகர வண்டியொன்றின் உரிமையாளருக்கு காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கான அறிக்கையை விநியோகிப்பதற்காக இந்த உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

30,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளதாகவும், முதல்கட்டமாக 20,000 ரூபாவை பெற்றுக்கொண்டபோது உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரை பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்