இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2015 | 11:32 am

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

”எமது உரிமை, எமது சுதந்திரம், எப்போதும்!” ” (Our Rights. Our Freedoms. Always”) என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை மனித உரிமைகள் தினம் முன்னெடுக்கப்படுகின்றது.

1948 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய, ​1950 தொடக்கம் உலகின் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை, மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைவாக கைச்சாத்திடப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் கலாசார சுதந்திரம், சிவில், அரசியல் உரிமை என்பன உறுதிப்படுத்தப்பட்டு இன்றுடன் 50 வருடங்கள் நிறைவு பெறுகின்றமையும் விசேட அம்சமாகும்.

இந்நிலையில், அடிப்படை சுதந்திரம் மற்றும் அனைவரினது உரிமைகளையும் பாதுகாப்பதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் தினம் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே ஐ.நா செயலாளர் நாயகம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

மத மற்றும் தனி நபர் சுதந்திரத்தை சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்