ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட களுபோவிலயைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட களுபோவிலயைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட களுபோவிலயைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 4:52 pm

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – களுபோவில பகுதியைச் சேர்ந்த இருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

240 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டமையால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களூடாக இலங்கையில் ஹெரோயின் வர்த்தக மத்திய நிலையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சட்டமா அதிபரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக குற்றவாளிகளுக்கு அதிகூடிய தண்டணையை வழங்குமாறு கோரப்பட்டது.

இதனை அடுத்து குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்