யாழ். சிறையில் கைதி உண்ணாவிரதம்

யாழ். சிறையில் கைதி உண்ணாவிரதம்

யாழ். சிறையில் கைதி உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 1:48 pm

யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதி ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரே நேற்று (08) மாலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், தம்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது பொலிஸார் சமூகமளிக்காமையால் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக தெரிவித்து குறித்த நபர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த கைதி கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்