மரபணு மாற்றம் செய்த நுளம்பு மூலம் மலேரியா பரவல் தடுப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு

மரபணு மாற்றம் செய்த நுளம்பு மூலம் மலேரியா பரவல் தடுப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு

மரபணு மாற்றம் செய்த நுளம்பு மூலம் மலேரியா பரவல் தடுப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 2:02 pm

மலேரியா நோய் பரவச் செய்யும் நுளம்பில் மரபணு மாற்றம் செய்வதன் மூலம் அந்நோய் பரவலைத் தடுக்க முடியும் என பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

மலேரியா நோய்க்கிருமியானது அனோஃபிலிஸ் கேம்பியே என்னும் நுளம்பினம் மூலம் பரவுகிறது.

இந்த நுளம்பில் மரபணு மாற்றம் செய்வதால் முட்டைகள் உருவாவதைக் கட்டுப்படுத்த இயலும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த முட்டைகளின் உருவாக்கக் கட்டுப்பாடு தொடர்பான மரபணு மாற்றமானது விரைவாக அடுத்தடுத்த தலைமுறை கொசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படும் விதமான தொழில்நுட்பமும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

காலப்போக்கில், மலேரியா நோய்க்கிருமியைப் பரப்பும் நுளம்பினப் பரவல் குறைந்துவிடும் அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்.

சாதாரணமாக, மரபணு மாற்றம் என்பது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் செல்லும்போது, அதில் 50 சதவீத அளவு மட்டுமே மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் புதிய மரபணு மாற்ற முறையின் கீழ், ஒரு தலைமுறையில் ஏற்படுத்தப்படும் மாற்றமானது 90 சதவீத அளவு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்தப் புதிய முறையின் மூலம், மலேரியா நோய் பரவலைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சிக் குழுவின் இணைத் தலைவர் ஆன்ட்ரியா கிரிசான்டி கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்