மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது மோதல்: திக்வெல்லயில் ஒருவர் உயிரிழப்பு

மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது மோதல்: திக்வெல்லயில் ஒருவர் உயிரிழப்பு

மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது மோதல்: திக்வெல்லயில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 10:44 am

திக்வெல்ல – பிஹிதிய கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மோதலில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்கரையில் இரு தரப்பினர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது நேற்று (08) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்