பந்தை வீசி எறிவதாக ஷிகர் தவான் மீது குற்றச்சாட்டு

பந்தை வீசி எறிவதாக ஷிகர் தவான் மீது குற்றச்சாட்டு

பந்தை வீசி எறிவதாக ஷிகர் தவான் மீது குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 3:09 pm

பந்தை வீசி எறிவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் சமீபத்தில் முடிவடைந்த, தென்னாபிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய வீரர் ஷிகர் தவான் சுழற்பந்து வீசினார்.

மொத்தமாக 3 ஓவர்கள் பந்து வீசியதில், 1 மெய்டன் ஓவருடன் 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் தவான்.

அவரது 3 ஆவது ஓவர் பந்து வீச்சின்போது, பந்தை எறிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. இன்னும் 14 நாட்களுக்குள், தவான் ஆய்வு மையத்தில் வைத்து தனது பந்து வீச்சு தன்மை குறித்த அறிக்கையைப் பெற வேண்டும்.

அதுவரை தவான் பந்து வீசுவதற்கு எந்த தடையும் கிடையாது என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்