திருகோணமலை கடற்பரப்பில் மிதப்பதாகக் கூறப்படும் சடலங்களைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது

திருகோணமலை கடற்பரப்பில் மிதப்பதாகக் கூறப்படும் சடலங்களைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது

திருகோணமலை கடற்பரப்பில் மிதப்பதாகக் கூறப்படும் சடலங்களைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 11:08 am

திருகோணமலை கடற்பரப்பில் மிதப்பதாகத் தெரிவிக்கப்படும் சடலங்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இது வரையில் சடலங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும், தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்தார்.

மூன்று டோரா படகுகள் திருகோணமலை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலையிலிருந்து 20 கடல் மைல் தூரத்தில் 6 சடலங்கள் மிதப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கடந்த 6 ஆம் திகதி முதல் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

கடற்படைத் தளபதியின் கோரிக்கைக்கு அமைய குறித்த சடலங்களைக் கண்டுபிடிப்பதற்கு Y12 என்ற திருகோணமலை – சீனன்குடா கடற்படை முகாமிற்குரிய விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

எனினும், தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் சடலங்கள் எவையும் காண்டுபிடிக்கப்படவில்லை என விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தியப் பிரஜைகளுடையது என சந்தேகிக்கப்படும் இரண்டு சடலங்கள் தலைமன்னார் மற்றும் திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்