ஒன்றரை வயது குழந்தையை நிலத்தில் அடித்துக் கொன்ற தந்தைக்கு மரண தண்டனை

ஒன்றரை வயது குழந்தையை நிலத்தில் அடித்துக் கொன்ற தந்தைக்கு மரண தண்டனை

ஒன்றரை வயது குழந்தையை நிலத்தில் அடித்துக் கொன்ற தந்தைக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 4:58 pm

ஒன்றரை வயதான தமது குழந்தையை, மனைவியின் முன்னிலையில் மூன்று தடவைகள் நிலத்தில் அடித்துக் கொன்ற தந்தைக்கு அம்பாறை பிராந்திய மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, குற்றவாளிக்கான மரண தண்டனையை இன்று அறிவித்தார்.

அம்பாறை மஹஓயா, கெகிரிஹேன பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் மார்ச் 26 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் அம்பாறை, கெகிரிஹேன பகுதியில் குழந்தை நிலத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, தந்தைக்கு எதிராக சட்டமா அதிபரினால், அம்பாறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த நபரின் மனைவி வழங்கிய முறைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்