ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை ”எட்னா”’ வெடித்துச் சிதறுகிறது (வீடியோ)

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை ”எட்னா”’ வெடித்துச் சிதறுகிறது (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 12:18 pm

ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான இத்தாலியிலுள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறி சூடான சாம்பல் மற்றும் குழம்பைக் கக்கி வருகிறது.

கடந்த 3 ஆம் திகதியிலிருந்து வெடித்துச் சிதறும் லாவாக்குழம்பை இரவுப் பொழுதுகளில் காண சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

எரிமலையை சுற்றியுள்ள பகுதிகள் புகையால் சூழப்பட்டு காட்சி தருவதுடன் பல கிலோ மீட்டர்கள் வரை தீப்பிழம்புகள் வெடித்துச் சிதறி வருகின்றன.

எரிமலை வெடிப்பு காரணமாக, அருகிலுள்ள Catania விமான நிலையம் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கடந்த ஒருவார காலமாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

3330 மீட்டர் உயரமுள்ள இந்த எட்னா எரிமலையானது ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய எரிமலையாகக் கருதப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்