அம்பாறை, தம்புள்ளையில் மகளிர் அரண் உருவாக்கம்

அம்பாறை, தம்புள்ளையில் மகளிர் அரண் உருவாக்கம்

அம்பாறை, தம்புள்ளையில் மகளிர் அரண் உருவாக்கம்

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 6:33 pm

ஒன்றிணைந்து மகளிர் அரணை உருவாக்கி தேசத்தை வலுப்படுத்தும் நோக்கில் நியூஸ்பெஸ்ட்டினால் ஆரம்பிக்கப்பட்ட சமூகப்பணி நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டது.

குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் மௌனமாக சேவையாற்றும் பெண்களைப் பலப்படுத்துவதே நியூஸ்பெஸ்ட்டினால் முன்னெடுக்கப்படும் இந்த சமூகப்பணியின் முக்கிய நோக்கமாகும்.

நியூஸ்பெஸ்ட்டின் “ஒன்றிணைந்து மகளிர் அரணை உருவாக்கும் சமூகப் பணி” இன்று அம்பாறை – அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கருத்தரங்கும் இடம்பெற்றது.

இதில் அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ​ஜெகதீசன் கலந்துகொண்டிருந்ததுடன், பெருமளவிலான பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் சென்று, பெண்களின் சமத்துவத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஒன்றிணைந்து மகளிர் அரணை உருவாக்கி தேசத்தை வலுப்படுத்தும் நியூஸ்பெஸ்ட்டின் முயற்சியின் மற்றுமொரு கட்டம் தம்புள்ளை நகரிலும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்