அதிக மழைப்பொழிவால் 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

அதிக மழைப்பொழிவால் 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

அதிக மழைப்பொழிவால் 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2015 | 10:54 am

அதிக மழையுடனான வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்மேடுகள் உடைந்து வீழ்தல் மற்றும் மண்சரிவுகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில் பல நாட்களாக தேங்கியிருக்கும்
நீரை வெளியேற்றுவதற்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மற்றும் கள்ளப்பாடு, வட்டுவாகல் பகுதிகளில் மழை வெள்ளம் பல நாட்களாகத் தேங்கியிருப்பதால் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், வௌ்ளம் வடிந்தோடுவதற்கான வடிகால் அமைப்புக்கள் உரிய முறையில் கட்டமைக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்