யாழ். புத்தூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

யாழ். புத்தூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

யாழ். புத்தூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 3:55 pm

யாழ். புத்தூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 
நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிலொன்று மோதி இன்று முற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
 
புத்தூர் பகுதியை சேரந்த 25 வயதான ஒருவரும் 51 வயதான ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
 
விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்