நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 12:38 pm

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றிரவு 7 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து இந்திய பிரஜை ஒருவரின் அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் குறித்த சடலத்தின் ஆடைப் பையிலிருந்து இந்திய முத்திரை பொறிக்கப்பட்ட பாக்கு பக்கெற்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சடலத்தின் வலது கையில் மூன்று உருவங்கள் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலத்தின் வலது கையில் வலயங்களும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

நிலாவெளி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்