சென்னை விமானநிலையத்தின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

சென்னை விமானநிலையத்தின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

சென்னை விமானநிலையத்தின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 1:12 pm

மழை வௌ்ளம் காரணமா, கடந்த 4 நாட்களாக முடங்கிருந்த சென்னை விமானநிலையத்தின் விமான சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழகத்தின் சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதுடன் போக்குவரத்தும் வழமைக்கு திரும்பிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வௌ்ளம் வடிந்தோடும் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் குப்பை கூலங்களால் நோய்த்தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.

இதனால், விசேட நடமாடும் மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சென்னை ரயில் நிலையத்தில் 20 இற்கும் அதிகமான ரயில் சேவைகள் இன்றைய தினமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்