சென்னையில் வௌ்ளத்தினால் நிர்க்கதியாகியுள்ள 200 யாத்திரிகர்கள் இன்று நாட்டிற்கு வருகை

சென்னையில் வௌ்ளத்தினால் நிர்க்கதியாகியுள்ள 200 யாத்திரிகர்கள் இன்று நாட்டிற்கு வருகை

சென்னையில் வௌ்ளத்தினால் நிர்க்கதியாகியுள்ள 200 யாத்திரிகர்கள் இன்று நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 10:36 am

தமிழகத்தின் சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கை யாத்திரிகள் 200 பேர் இன்று நாட்டை வந்தடையவுள்ளனர்.

குறித்த யாத்திரிகர்கள் நேற்றைய தினம் சென்னையிலிருந்து திருச்சிக்கு பஸ்ஸில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மஹா போதி சங்கத்தைச் சேர்ந்த கலவான மஹநாம தேரர் கூறினார்.

இதேவேளை இலங்கை யாத்திரிகர்களில் மேலும் ஒரு பகுதியினர் சென்னையில் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்

சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவின் சென்னையில் தங்கியுள்ள இலங்கை யாத்திரிகர்கர்களை அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை அனுப்பவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டது

திருச்சி மற்றும் புத்தகயா ஆகிய பகுதிகளுக்கு குறித்த விமானங்களை அனுப்பவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் மக்கள் தொடர்பாடல் முகாமையாளர் தீபால் பெரேரா கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்