சாதாரண தர மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகத்திற்காக விசேட ஒருநாள் சேவை

சாதாரண தர மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகத்திற்காக விசேட ஒருநாள் சேவை

சாதாரண தர மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகத்திற்காக விசேட ஒருநாள் சேவை

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 2:13 pm

கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு விசேட சேவை ஆட்பதிவு திணைக்களத்தில் நாளை (07) முன்னெடுக்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான விசேட சேவை நேற்றும் முன்னெடுக்கப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார குறிப்பிட்டுள்ளார்.

நாளை (07) விசேட சேவையில் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் சமூகமளிக்க வேண்டியதில்லை எனவும் ஆணையாளர் நாயகம் கூறியள்ளார்.

மாணவர்களின் பெற்றோர்களால் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்பதிவு திணைக்களத்தில் நாளை (07) நடைபெறவுள்ள விசேட சேவையில் பெற்றோர்களால் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாத மாணவர்கள் தங்களின் நம்பிக்கை வாய்ந்த ஒருவரூடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

எனினும் குறித்த நபர் தொடர்பில் கிராம சேவை அதிகாரி முன்னிலையில் மாணவரால் கையொப்பமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட கடிதமும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்