கர்ப்பிணிகளுக்கு போசாக்கு கொடுப்பணவு உரிய முறையில் வழங்கப்படுகின்றதா என ஆராய விசேட குழு

கர்ப்பிணிகளுக்கு போசாக்கு கொடுப்பணவு உரிய முறையில் வழங்கப்படுகின்றதா என ஆராய விசேட குழு

கர்ப்பிணிகளுக்கு போசாக்கு கொடுப்பணவு உரிய முறையில் வழங்கப்படுகின்றதா என ஆராய விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 9:32 am

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுக்கான கொடுப்பனவு உரிய வகையில் வழங்கப்படுகின்றதா என்பதை ஆராய்வதற்கு விசேடக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களை தொடர்புபடுத்தி இது தொடர்பான தேடுதல்களை குறித்த குழு முன்னெடுக்கவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரத்ன கூறினார்
இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

சில பிரதேச செயலகங்களில் கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குணவுக்கான கொடுப்பனவு உரிய வகையில் முன்னெடுப்படுக்கப்படுவதில்லை எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரத்ன தெரிவித்தார்

மேலும் கர்ப்பிணித் தாயொருவருக்கு 8 ஆவது மாதத்திலிருந்து சிசுவுக்கு 6 மாதங்கள் பூர்த்தியாகும் வரை மாதமொன்றுக்கு 2000 ரூபா பெறுமதியான போஷாக்குணவுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது

குறித்த உதவித் தொகையினூடாக பிதேச செயலாளர் காரியாலயங்களினூடாக அனுமதிக்கப்பட்ட விநியோகஸ்தர் ஒருவரூடாக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் கூறினார்

எவ்வாறாயினும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷணைப் பொருட்களுக்கான கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்