அதிக மழை காரணமாக புத்தளம்,மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு

அதிக மழை காரணமாக புத்தளம்,மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு

அதிக மழை காரணமாக புத்தளம்,மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 11:14 am

அதிக மழை காரணமாக தற்போது புத்தளம் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 1000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்றவானிலையால் இடம்பெயர்ந்தோருக்காக அம்பாறை மாவட்டத்தில் முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

அதிக மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள நிலை காரணமாக இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகின்றது

மன்னாரிலிரிந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதியில் மணிக்கு 70 இலிருந்து 80 வரையான கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்