அக்கரைப்பற்றில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொண்ட ஐவர் கைது

அக்கரைப்பற்றில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொண்ட ஐவர் கைது

அக்கரைப்பற்றில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொண்ட ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2015 | 2:24 pm

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய அக்கரைப்பற்று பொலிஸாருடன் இணைந்து இன்று (06) அதிகாலை நடத்திய சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் விசாரணை அதிகாரி ராஜ கருனா குறிப்பிட்டார்.

அனுமதியின்றி பிரதான மின் கம்பத்திலிருந்து குறித்த சந்தேகநபர்களால் மின்சாரம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையினூடான மின் கசிவு ஏற்பட்டு உயிராபத்துக்களும் ஏற்படக் கூடும் எனவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோதமாக மின் இணைப்பை பெற்ற ஐவரையும் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்