பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறப்பு

பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறப்பு

பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2015 | 1:21 pm

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் மகாவலி ஆற்றில் பயன்பெறுகின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பராக்கிரம சமுத்திரத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் ரொஷான் இந்திக்க குறிப்பிட்டார்.

பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளதாகவும், இதனையடுத்து 10 வான் கதவுகள் தலா ஒரு அடிவீதம் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வான் கதவுகள் ஊடாக செக்கனுக்கு 1,200 கனவளவு நீர் பாய்வதாகவும் நீர்ப்பாசன பொறியியலாளர் கூறினார்.

மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெள்ளநிலைமை ஏற்படக்கூடும் என்பதால், சமுரத்தின் நீர்மட்டத்தை குறிப்பிட்ட அளவால் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கமாறு நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் காரணமாகவே செக்கனுக்கு 1,200 கனவளவு வீதம் பராக்கிரம சமுத்திரத்தின் நீரை மகாவலி ஆற்றிற்கு திசை திருப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுரத்திரத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார்.

எனவே, பராக்கிரம சமுத்திரத்தின் தாழ்நிலங்களில் மகாவலி ஆற்றில் பயன்பெறும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்