225 பேர் இளையோர் பாராளுமன்றத்திற்கு தகுதி: பிரதமர் தலைமையில் அமர்வு

225 பேர் இளையோர் பாராளுமன்றத்திற்கு தகுதி: பிரதமர் தலைமையில் அமர்வு

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2015 | 9:59 pm

இலங்கை இளையோர் பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மஹரகமவிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

தேர்தலில் வெற்றிபெற்ற 160 உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் 65 உறுப்பினர்கள் அடங்கலாக 225 பேர் இளையோர் பாராளுமன்றத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இளையோர் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கு இதன் போது பிரதமர் குழு ஒன்றை அமைத்தார்.

அதன் தலைவராக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் செயற்பட உள்ளதுடன் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா மற்றும் பிரதியமைச்சர் அநுராத ஜயரத்னவும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்