வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

 வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

 வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 2:00 pm

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் மரபனு மாதிரிகள் ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் தாயின் இரத்த மாதிரிகளுடன் ஒத்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் வசீம் தாஜூடீனின் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரிலிருந்து மீட்கப்பட்ட சடலம் எரியூட்டலால் ஏற்பட்ட மரணம் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோனால் ஏற்கனவே நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வசீம் தாஜூடீன் தாக்குதலின் பின்னர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரபனு பரிசோதனை அறிக்கை மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை என்பன கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஷிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்