பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்குவதில் சிக்கல் நிலை – இலங்கை ஆசிரியர்கள் சங்கம்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்குவதில் சிக்கல் நிலை – இலங்கை ஆசிரியர்கள் சங்கம்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்குவதில் சிக்கல் நிலை – இலங்கை ஆசிரியர்கள் சங்கம்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 9:58 am

பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்காக வவுச்சர்கள் வழங்கப்படுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

சில பாடசாலைகளுக்கான வவுச்சர்கள் இதுவரை வழங்கப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம் பந்துசேனவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

பெரும்பாலான பாடசாலைகளுக்கும் , கல்வி வலய அலுவலகங்களுக்கும் வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை வுவுச்சர்கள் செல்லுபடியாகும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம் பந்துசேன தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்