தொடர்மழையினால் தமிழகத்தில் 50 இலட்சம் மக்கள் பாதிப்பு

தொடர்மழையினால் தமிழகத்தில் 50 இலட்சம் மக்கள் பாதிப்பு

தொடர்மழையினால் தமிழகத்தில் 50 இலட்சம் மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 7:07 am

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையினால் சுமார் 50 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையினால் இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த 48 மணித்தியாலங்களில் மழை குறைவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

கடலூர் மற்றும் தஞ்சாவூர் மற்றும் கரையோர பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்துள்ளது.

ஏனைய பகுதிகளில் மழை சற்று குறைவடைந்திருந்த போதிலும் மழைநீர் வெளியேறாததால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்கள் வெளியேற முடியாத வகையில் வீதிப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன,

மேலும் சென்னை சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுமார் 5,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தில் பெய்த கனமழையால் சுமார் 15,000 கோடி இந்திய ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைந்த கூட்டமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 ஆண்டுகள் இல்லாத வகையில் பெய்த கடும் மழையினால் தனித்தீவான சென்னை மாநகரத்திற்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வௌ்ள நிவாரண நிதியாக 1000 கோடி இந்திய ரூபாவை வழங்குவதாகவும் இதன்போது பிரதமர் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவும் வழமைக்கு திரும்பும் வரை உணவுப் பொதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்