செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்?

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்?

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்?

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2015 | 4:42 pm

செவ்வாய் கிரகத்திற்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் ஐந்து வயதான ஆலிவர் கிட்டிங்ஸின் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை பதிலளித்துள்ளது.

விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஆலிவர் கிட்டிங்ஸின் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸாவின் உதவியை நாடியது பிரிட்டிஷ் தபால்துறை.

பின்னர் நாசாவுடன் இணைந்து இதற்கான தொகை கணக்கிடப்பட்டு, அதற்கு 17,000 டொலர் செலவாகும் என அந்த சிறுவனுக்கு பிரிட்டிஷ் தபால்துறை அறிவித்தது.

இந்த பதில் கிடைத்தவுடன் “அந்த அளவுக்கு பணம் தேவையா,” என வாயடைத்து போனானாம் அந்தச் சிறுவன்.

செவ்வாய் கிரகத்திற்குக் கடிதம் அனுப்ப அவ்வளவு தபால்தலைகள் ஒட்ட வேண்டுமே எனக் கவலை வேறு வந்துவிட்டதாம்!
Source: BBC


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்