இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2015 | 7:41 pm

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவுக்குவந்தது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஜயந்த தர்மதாச தலைவர் பதவிக்காக போட்டியிட இன்று பிற்பகலில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரைத் தவிர நிஷாந்த ரணதுங்க, திலங்க சுமதிபால, சுமித் பெரேரா ஆகியோர் இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, முன்னாள் டெஸ்ட் அணித்தலைவரும், அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க உபதலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அர்ஜூன ரணதுங்கவைத் தவிர ஜயந்த தர்மதாஸ, கங்காதரன் மதிவாணன், ஷம்மி சில்வா, அசங்க செனிவிரத்ன ஆகியோர் உபதலைவர் பதவிக்காக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஹிரந்த பெரேரா மற்றும் மொஹான் டி சில்வா ஆகியோர் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுகின்றனர்.

ஷம்மி சில்வா, ஈ நாரங்கொட ஆகியோர் பொருளாளர் பதவிக்காகவும், நிலந்த ரத்நாயக்க, ரவின் விக்ரமரத்ன ஆகியோர் உபசெயலாளர் பதவிக்காகவும் போட்டியிட வேட்மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்மனுக்களுக்கான எதிர்ப்புகளை சமர்ப்பிக்க இன்று மாலை 6 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த அதேவேளை, இந்த காலப்பகுதியில் 14 எதிர்ப்புகள் கிடைத்துள்ளன.

அவற்றில் ஒன்று முன்னாள் செயலாளரான நிஷாந்த ரணதுங்கவின் தரப்பால் இன்று பிற்பகலில் முன்வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்