இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அர்ஜூன ரணதுங்க வேட்புமனு தாக்கல்

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அர்ஜூன ரணதுங்க வேட்புமனு தாக்கல்

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அர்ஜூன ரணதுங்க வேட்புமனு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 11:46 am

முன்னாள் இலங்கை டெஸ்ட் அணி தலைவர் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (04) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பிரதி தலைவர் பதவிக்காகவே அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வேட்புமனு தாக்கல் செய்த சந்தரப்பத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோரும் இருந்தனர்.

இம்முறை தேர்தலில் தலைவர் பதவிக்கு முன்னாள் செயலாளரான நிஷாந்த ரணதுங்க , பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் பதுரலிய விளையாட்டு கழகத்தின் தலைவர் சுமித் பெரேரா ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்