நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ளக்கூடிய நாடுதான் இந்தியா: உதவவும் தயார் – அமெரிக்கா

நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ளக்கூடிய நாடுதான் இந்தியா: உதவவும் தயார் – அமெரிக்கா

நெருக்கடிகளை சமாளித்துக் கொள்ளக்கூடிய நாடுதான் இந்தியா: உதவவும் தயார் – அமெரிக்கா

எழுத்தாளர் Bella Dalima

04 Dec, 2015 | 4:11 pm

கன மழையால் சிதைந்து போயுள்ள சென்னைக்கு உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வரலாறு காணாத கன மழையில் சென்னை சிக்கியமை உலகையே உலுக்கியுள்ளது. இந்தப் பெருவெள்ளம் குறித்து வாஷிங்டனில் நேற்று (03) அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர், சென்னை மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடும் இந்திய அரசும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள சேதத்தை எதிர்கொண்டுள்ளது.

[quote]வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். வெள்ளத்தில் சிக்கி தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களைப் பற்றியே எங்களது சிந்தனை உள்ளது. இந்த கடினமான நேரத்தில் உதவி அளிப்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசித்து வருகிறோம். உதவி கேட்டு இந்தியாவிடம் இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட அவசர கால நெருக்கடிகளை சமாளித்துக்கொள்ளக்கூடிய வளர்ச்சி பெற்ற நாடுதான் இந்தியா[/quote]

என மார்க் டோனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்