அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன் நிறைவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன் நிறைவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2015 | 6:34 am

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை, இன்று (04) காலை 8 மணிக்கு நிறைவு செய்யவுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளாமை, ஓய்வூதியத்தை இரத்துச் செய்தமை மற்றும் அர ஊழியர்களுக்கு வழங்கிய நிவாரணங்களை குறைத்தமைக்கு எதிராக நேற்று முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

தொழிற்சங்க நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டொக்டர்.நவிந்த சொய்சா தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்து இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என டொக்டர்.நவிந்த சொய்சா தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அரச சேவையாளருக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக பேராட்டம் நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாரகவுள்ளதென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்