வௌ்ளக்காடாய் தமிழகம்: மீட்புப் பணிகள் தீவிரம் (Photos)

வௌ்ளக்காடாய் தமிழகம்: மீட்புப் பணிகள் தீவிரம் (Photos)

வௌ்ளக்காடாய் தமிழகம்: மீட்புப் பணிகள் தீவிரம் (Photos)

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 6:03 pm

நூற்றாண்டு வரலாறு காணாத வெள்ளத்தினால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 250 ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 700 ற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், வௌ்ள ஆக்கிரமிப்பு தொடர்கிறது.

Rain in Chennai

பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் சுமார் 5000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொலிஸார், தீயணைப்புப் படையினர், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தவண்ணமுள்ளனர்.

2

பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்கியிருந்த 18,000 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தத்தமது வீட்டுக் கூரைகளிலும் மாடிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

17_2643591a

 

அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

 

chennai-759body

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படும் நிலையில், சில பகுதிகளில் ஹெலிகொப்டர் மூலம் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

g7

 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடிநீர், உணவு இன்மையால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகள், கல்லூரிகள், பொதுக்கட்டிடங்களில் தங்கியுள்ளனர்.

chennai-floods_650x400_41447764757

அவர்களுக்கு சமூக அமைப்புக்கள், சினிமாத்துறையினர் என பலரும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவும் உதவிகள் பெறப்பட்டு பகிரப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

SYLENRABABU RESQUE 1

தமிழகத்தின் பல ஆறுகள் வெள்ளத்தினால் பெருக்கெடுத்துள்ளன. வீதிகள் மற்றும் பாலங்களிலும் வெள்ளம் நிறைந்துள்ளது. இதனால் தரைவழி மற்றும் வான்வழி போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.

WR_20151203095157

இலட்சக்கணக்கான நீர்நிலைகள் நிரம்பி வழிவதனால், தரைவழிப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

11_2643585a

சென்னையிலிருந்து ஏனைய பகுதிகளுக்கும், ஏனைய இடங்களிலிருந்து சென்னைக்குமான 47 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், 6 சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

6_2643575a

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் வௌ்ளம் தேங்கியதால் விமான சேவைகள் முடங்கியுள்ளன.

சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

airportchennai_2642689f

அத்துடன்,சென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தொலைத்தொடர்பு வசதிகளும் தடைப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் விடுமுறை எடுப்பதற்கு அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பாடசாலை தவணைப்பரீட்சைகள், ஜனவரி முதல் வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Chennai-rains_1581233g

வரலாறு காணாத கடும் மழைப் பொழிவிற்கு தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையே காரணம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 1901ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி 24 மணி நேரத்தில் பதிவான 26.1 செ.மீ. மழைவீழ்ச்சியே அதிகபட்ச மழை வீழ்ச்சியாக பதிவாகியிருந்தது.

எனினும், நேற்று காலை நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக 33 செ.மீ மழை வீழ்ச்சியும் புறநகர் பகுதிகளில் அதிக பட்சமாக 49 செ.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று இரவு முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு கவலைக்குரிய அளவில் பாதிப்பு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

map-story_647_120115115655

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வௌ்ளத்தினால் அங்கிருக்கும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், தமக்கு எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என இந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

7_2643574a

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்