வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பம்

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பம்

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2015 | 1:38 pm

வரவு செலவுத் திட்ட பாராளுமன்ற குழுநிலை விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது.

இந்த சந்தர்ப்பத்தில் வரலாற்றின் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் இன்று உரையாற்றினார்.

[quote]பாராளுமன்றத்தை பலப்படுத்தி, இந்த நாட்டில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர்களின் குணாதியசங்களினால் ஏற்படும் அழுத்தங்கள், செயற்பாடுகள், அரச நிர்வாக முகாமைத்துவம் ஆகியவற்றுக்கு கொடுக்க வேண்டிய தீர்வாக, ஜனாதிபதியிடமுள்ள அனைத்து அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்க வேண்டும் என்பதை நான் தனிப்பட்ட ரீதியில் நம்புகின்றேன். 280 பேர் பயணிக்கக்க கூடிய ஸ்ரீ லங்கன் விமானமொன்றில், சர்வதேச நாடுகளுக்கு 280 பேரை அழைத்துச் சென்று, அந்த விமானத்தை 2.3 நாட்களுக்கு அந்த நாடுகளில் வைத்திருந்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும் அழுத்தம் தொடர்பில் நாம் கவலையடைய வேண்டும். மரணங்களுக்கான சோக செய்திகளை அனுப்பும் அலுவலகங்களிலுள்ளவர்களும் கொள்ளையடித்துள்ளனர். மலர் வளையங்களின் ஊடாகவும் கொள்ளையடித்துள்ளனர். எனினும் நாம் அந்ந நிலையை மாற்றியுள்ளோம். இது தொடர்பில் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதியை குறைக் கூறப்போவதில்லை. எனினும் முகாமைத்துவத்தின் போது அவர்கள் என்ன செய்கின்றனர்? எதனை செய்கின்றனர் என்பது தொடர்பில் ஆராயாத காரணத்தினால், இவ்வாறு மலர் வளையத்திலும் கொள்ளையடித்த யுகமொன்றை நாம் நிறைவு செய்துள்ளோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்