மகளிர் அரணொன்றை உருவாக்கும் முயற்சியின் அங்குரார்ப்பண வைபவம்

மகளிர் அரணொன்றை உருவாக்கும் முயற்சியின் அங்குரார்ப்பண வைபவம்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 9:43 pm

மகளிர் அரணை உருவாக்கி தேசத்தை வலுப்படுத்தும் நியூஸ்பெஸ்ட்டின் மகோன்னத முயற்சியின் அங்குரார்ப்பண வைபவம் நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மௌனமாக சேவையாற்றும் பெண்களைப் பலப்படுத்தி, மகளிர் அரணொன்றை உருவாக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். பருத்தித்துறையில் இன்று நடைபெற்றது.

பெண்களின் சமத்துவத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் நியூஸ்பெஸ்ட், சக்தி மற்றும் சிரச முன்னெடுக்கும் இந்தத் திட்டத்துடன் இலங்கை பொலிஸாரும் இணைந்து கொண்டுள்ளனர்.

யாழ். வடமராட்சி – பருத்தித்துறை கடற்கரையில் மகளிர் அரண் உருவாக்கப்பட்டது.

இதன்போது, பட்டிகளை அணிந்த வண்ணம் கைகளை உயர்த்தி பெண்கள் தமது முன்னேற்றத்தை வலியுறுத்தும் சங்கற்பம் பூண்டனர்.

பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் மகளிர் அரண் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான பரிந்துரைகள் சேகரிக்கப்பட்டன.

இதனையடுத்து, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நகர சபை செயலாளர், பருத்தித்துறை பொலிஸாரின் மகளிர் பிரிவு பெறுப்பதிகாரி, மகளிர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்பு ஆர்வலர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மகளிருக்கான அரண் செயற்றிட்டம் நாளை காலை யாழ். கன்னாத்திட்டி பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மகளிர் அரண் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் அம்பிலிப்பிட்டிய நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பெண்களை வலுவூட்டுவதற்கான பட்டிகள் அணிவிக்கப்பட்டதுடன், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அம்பிலிபிட்டிய ஶ்ரீ போதிராஜாராம விஹாரையிலும் இடம்பெற்ற நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

3fbe5762-595d-4571-a32e-e7066b26e45b 6a2dc268-7740-42cc-96a4-aa2b707ee27b 68db59c0-ab3b-4b95-8a0c-20c8c6b1ac6c c1f30d2e-4551-41cc-9dd5-d6692df4ffea e19f41c1-b47f-4c98-9202-409ab094a9fd f4b2954a-bff6-4fc4-9521-4c3f67cb3950


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்