பதுளையில் சிறுவனொருவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபர் கைது

பதுளையில் சிறுவனொருவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபர் கைது

பதுளையில் சிறுவனொருவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2015 | 10:46 am

பதுளை எல்ல பல்லேகட்டுவ பகுதியில் 14 வயது சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 14 வயதான சிறுவன் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

47 வயதான பிரதி அதிபரால் குறித்த சிறுவன் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவனின் தாயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்