ஜனாதிபதி, பிரதமரின் நிதி ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஜனாதிபதி, பிரதமரின் நிதி ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 9:31 pm

ஜனாதிபதி, பிரதமரின் நிதி ஒதுக்கீடு மற்றும் 19 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் எவ்வித திருத்தங்களும் இன்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டார்.

தமக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி ஒருவர் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்போது, தமது வெளிநாட்டு விஜயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்