சுனில் நரைன் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை

சுனில் நரைன் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை

சுனில் நரைன் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 4:53 pm

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒரு ஓவரில் 6 பந்துகளையும் வித்தியாசமான முறையில் வீசக்கூடிய வித்தை தெரிந்த சுனில் நரைனின் பந்து வீச்சில் அண்மைக்காலமாக சந்தேகம் நிலவுவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், அவரது பந்து வீச்சு தொடர்பில் இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் கடந்த 17 ஆம் திகதி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில், அவர் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவது தெரியவந்துள்ளது.

இதனால், சுனில் நரைன் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசுவதற்கு இன்று முதல் தடை விதித்து, சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

எனினும், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கலாம் எனவும் பந்து வீச்சு தொடர்பில் மீளாய்வு செய்ய அவருக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்