கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி

கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி

கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2015 | 7:50 am

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சென் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. சென் பெர்னார்டினோ நகரம் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்தில் பொலிஸார் மற்றும் வெடிபொருள் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்