உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதியரசர் பதவிப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதியரசர் பதவிப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைமை நீதியரசர் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

03 Dec, 2015 | 10:15 pm

உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதியரசர் ஒருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான பதில் தலைமை நீதியரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

உயர் நீதிமன்ற நீதியரசராக கே.டி சித்ரசிறி பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதியரசராக 2009 ஆம் ஆண்டில் இருந்து சேவையாற்றிய கே.டி சித்ரசிறி 1978 ஆம் ஆண்டில் நீதிமன்ற சேவையில் பிரவேசித்திருந்தார்.

அவர் அம்பலாங்கொடை தர்மாஷோக மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைமை நீதியரசராக நலீன் ஜயலத் பெரேரா ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்